Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 23 பிப்ரவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதன் விளைவாக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியது.
தொடர்ச்சியாக வாகனங்கள் மோதிய இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சில நபர்கள் பலத்த காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM