Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மோசடியில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு மேலாளரை உள்ளே செல்ல விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.
அப்போது வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 548 தங்க நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமானது. மயமான பொட்டலங்கள் வேறு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் வியாபாரிகளின் தினசரி சேமிப்பு தொகை வங்கியின் வைப்பு நிதி ரூ. 29 கோடி மாயமானது
இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட வங்கி செயலாளர் தேவராஜ், உதவி செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த மோசடி தொடர்பாக தூத்துக்குடி பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து வங்கி செயலர், உதவி செயலரின் அசையாத சொத்துக்களை போலீசார் ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில் இவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் விடுவதில் தொடர்ந்து குளறுபடி ஏற்பட்டு வருவதால், 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நகைகைள் சேமிப்பு நிதி வைப்பு நிதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி அரசு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியை முற்றுகையிட்டு மேலாளரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசாரிடம் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam