Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச)
அடையாறில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கு; அடையாள அணிவகுப்பை நடத்த அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் குழந்தை என மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மூவரை கொலை செய்ததாகவும், பீகார் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளிடம் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடையாறு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேஜிஸ்ட்ரேட் சென்று சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்துவார் அனுமதி வழங்கப்பட்டதுடன், இந்த வாரத்தில் இம்மனு மீதான விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ