Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 23 பிப்ரவரி (ஹி.ச.)
பீகார் மாநிலம், பாட்னாவில் ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மனீஷ் குமார் (வயது 27), திரு. மஞ்சித் குமார் (வயது 25) ஆகியோர், அதே கிராமத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்நிகழ்வின்போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென உள்ளே நுழைந்து, சகோதரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, இருவரையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்ததில், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். உடற்கூறு ஆய்வுக்காக சகோதரர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓடிய குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM