Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பக்திகா மாகாண எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதில், சுமார் 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகிய அமைப்புகளின் ஏழு மறைவிடங்களை குறிவைத்து இந்த துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், உயிரிழந்த 20 பேரும் பயங்கரவாதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களும் அடங்குவர் எனவும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் உள்நாட்டு தோல்விகளையும், குறைபாடுகளையும் மறைப்பதற்காகவே அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா எப்போதும் முழு ஆதரவை வழங்கும்.
என தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM