Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு, மேற்கு வங்கம் , அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக அரசியல் கட்சிகளும் மாநிலத் தேர்தலுகாக தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேர்தல் முன்னெற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை வழங்க மாநில தேர்தல் ஆணையர்கள் அறிவுரை வழங்க உள்ளது. இதற்கான மாநாடு ஒன்றை ஏற்பாட்டை திட்டமிட்டுள்ளது.
மாநில தோ்தல் ஆணையங்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய வட்டமேஜை மாநாட்டுக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு முன்பு இத்தகைய மாநாடு 1999இல் நடைபெற்றது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
இந்த மாநாடு இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெறும்.
தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் மாநாட்டில் கலந்து கொள்வர்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மாநில தோ்தல் ஆணையா்கள் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் சட்டக் குழுக்களுடன் மாநாட்டில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்பர்கள்.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநில தலைமைத் தோ்தல் அலுவலா்களும் (சிஇஓ) மாநாட்டில் பங்கேற்பார்கள்.
நாள் முழுவதும் நடைபெறும் மாநாட்டின்போது தொழில்நுட்பம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் பகிா்ந்து கொள்வது, தோ்தல் செயல்முறைகள் மற்றும் தோ்தல் பொருள்களை கையாளும் முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தேர்தல் நிா்வாகத்தில் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கும் இந்த சிறப்பு வட்டமேஜை மாநாடு ஒரு தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam