Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 23 பிப்ரவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 16,72,075 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 8,12,937 பேரும், பெண் வாக்காளர்கள் 8,58,964 பேரும் உள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 174 வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,37,359 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,15,728 பேரும், பெண்கள் 1,21,582 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 49 பேரும் உள்ளனர். இத்தொகுதியில் 339 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,04,519 பேரும், பெண் வாக்காளர்கள் 1,13,177 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் உள்ளனர்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,25,056 ஆண்கள், 1,34,773 பெண்கள் மற்றும் 17 மூன்றாம் பாலினத்தவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு 341 வாக்குச்சாவடிகள் செயல்படுகின்றன.
நிலக்கோட்டை (தனி) தொகுதியில் ஆண்கள் 1,07,389 பேரும், பெண்கள் 1,11,673 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 15 பேரும் உள்ளனர். இந்த தொகுதியில் 305 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நத்தம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,27,116 பேரும், பெண் வாக்காளர்கள் 1,31,421 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 66 பேரும் உள்ளனர். இங்கு 359 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,14,893 ஆண்கள், 1,22,765 பெண்கள் மற்றும் 21 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் 316 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேடசந்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,18,236 பேரும், பெண் வாக்காளர்கள் 1,23,573 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 4 பேரும் உள்ளனர். இங்கு 327 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் முழுமையாக சீராய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN