தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் ஆணையம் 2025ல் துவக்கியது. இதற்காக, நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, எஸ்.ஐ.ஆர்.எனப்படும் வ
தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை, தலைமை தேர்தல் ஆணையம் 2025ல் துவக்கியது. இதற்காக, நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, எஸ்.ஐ.ஆர்.எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடைபெற்றது.

இதை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடியாக இருந்த வாக்காளர்களில், 9730 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர்.

இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 22.8 லட்சம் மனுக்கள், பெயர் நீக்க 2 லட்சம்; திருத்தம் செய்ய 9.90 லட்சம் மனுக்கள் என, மொத்தம் 34.7 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

அவற்றை பரிசீலித்து, இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் இன்று பட்டியலை வெளியிட்டனர்.

அதன் விபரம் பின்வருமாறு:

நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில், ஆண் வாக்காளர்கள், 6,35,299, பெண் வாக்காளர்கள், 6,75,452, இதரர், 200, மொத்தம்: 13,10,951. நீக்கம் செய்யப்பட்டவர்கள், 1,43,321 .

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம் பகவத் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 14,97,417 வாக்காளர்கள் உள்ளனர்

சேலத்தில் ஆண் வாக்காளர்கள் - 13,70,962, பெண் வாக்காளர்கள்- 13,84,548, மூன்றாம் பாலினத்தவர்கள்-320, மொத்த வாக்காளர்கள்-27,55,830.

திருச்சியில் ஆண் வாக்காளர்கள் 10,31,354, பெண் வாக்காளர்கள்- 10,94,642, மூன்றாம் பாலினத்தவர்கள்-307, மொத்த வாக்காளர்கள்-21,26,303.

கடலூரில் ஆண் வாக்காளர்கள் - 9,91,527, பெண் வாக்காளர்கள்- 10,23,979, மூன்றாம் பாலினத்தவர்கள்-293, மொத்த வாக்காளர்கள்-20,15,196.

செங்கல்பட்டில் ஆண் வாக்காளர்கள் 11,04,511, பெண் வாக்காளர்கள்- 11,55,144, மூன்றாம் பாலினத்தவர்கள்-381, மொத்த வாக்காளர்கள்- 22,60,036.

கன்னியாகுமரியில் ஆண் வாக்காளர்கள் - 7,51,016, பெண் வாக்காளர்கள்- 7,59,390, மூன்றாம் பாலினத்தவர்கள்-144, மொத்த வாக்காளர்கள்- 15,10,550.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 7,29, 216, இதில் ஆண் வாக்காளர்கள் 3,60,493, பெண் வாக்காளர்கள் 3,68,676, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 47 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கோவையில் ஆண் வாக்காளர்கள் 13,00,889, பெண் வாக்காளர்கள்- 13,95,396, மூன்றாம் பாலினத்தவர்கள்-528, மொத்த வாக்காளர்கள்- 26,96,813.

தொடர்ந்து மாவட்டம் வாரியான புள்ளி விவரங்கள் வெளியாகி வருகின்றன.

மாநிலம் முழுதும் உள்ள இறுதி வாக்காளர் விபரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார்.

Hindusthan Samachar / vidya.b