கேரளா தனியார் பள்ளியில் எதிர்பாராத தீ விபத்து - 4 பேருந்துகள் சேதம்
திருவனந்தபுரம், 23 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம், செங்கோட்டுக்கோணம் மாவட்ட துண்டத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இன்று அதிகாலை, பள்ளியின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்து வ
கேரளா தனியார் பள்ளியில் எதிர்பாராத தீ விபத்து - 4 பேருந்துகள் சேதம்


திருவனந்தபுரம், 23 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம், செங்கோட்டுக்கோணம் மாவட்ட துண்டத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை, பள்ளியின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க கடுமையாக முயற்சி செய்தனர்.

எனினும், இந்த விபத்தில் பேருந்துகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இது ஒரு திட்டமிட்ட சதிச்செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பள்ளியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் 3 பேருந்துகள் முழுமையாகவும், ஒரு பேருந்து பகுதியளவும் எரிந்து நாசமாயின.

Hindusthan Samachar / JANAKI RAM