சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகள் கோரியுள்ளோம் - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் த
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகள் கோரியுள்ளோம் -  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் நேற்று (22.02.2026) முதல் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (23.02.2026) ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா கூறுகையில்,

திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மமவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம்.

இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.

அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர். என்றார்.

கடந்த முறை திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b