கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரத்தில் திடீர் நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி, 23 பிப்ரவரி (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் திடீரென பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். செம்பராம்பட்டு, பூட்டை, நெடுமானூர், சேஷசமுத்திரம
நில அதிர்வு


கள்ளக்குறிச்சி, 23 பிப்ரவரி (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில்

திடீரென பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள்

தெரிவித்துள்ளனர்.

செம்பராம்பட்டு, பூட்டை, நெடுமானூர், சேஷசமுத்திரம், சோழம்பட்டு உள்ளிட்ட

50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த அதிர்வால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு

வெளியேறி சாலைகளில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு

நிலவியது.

அதேபோல் கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளான பலப்பட்டு, மோட்டம்பட்டி, மூலக்காடு

உள்ளிட்ட கிராமங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத

நிலையில், மீண்டும் அதிர்வு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam