Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஸ்டாலின் சாலையில் செல்வி மருந்தகம் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் செயல்பட்டு வருகிறது.
இந்த மருந்தகத்திற்கு சென்று மாத்திரைகளை பொதுமக்கள் கேட்டால் அங்கு பணிபுரியும் நபர் ஒருவர் மருத்துவர் ஒருவரின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது எங்கிருக்கிறது எந்த டப்பாவில் உள்ளது,என்ன மருந்து என்ன பெயர் என்ற விசாரித்து அதன் பின் கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஒருவர் இந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று கோல்டாக உள்ளது மாத்திரைகள் வழங்குமாறு கேட்டபோது அவர் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அஜித்குமார் என்ற மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்க எங்கும் தேடிக்கொண்டு மாத்திரை வழங்கினார்.
இது குறித்து மருந்து வாங்கிய நபர் யாரிடமோ கேட்டு கேட்டு கொடுக்கிறீர்களே எனக்கு பயமாக இருக்கிறது என கேட்ட பொழுது,
மெடிக்கலில் உரிமையாளர் வேறொருவர் ஆனால் நான் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.
எனது அனுபவத்தின் அடிப்படையில் மருந்து மாத்திரைகளை கொடுத்து வருகிறேன் இதற்கு Bpharm படித்திருக்க வேண்டும் என அவர் தெரிவிக்கும் வீடியோவும் பதிவாகியது.
அதில் அனுபவத்தில் மாத்திரை வழங்குவதாகவும் எனக்கு தெரியவில்லை என்றால் டாக்டர் கேட்டு மருந்து வழங்குவதாகவும், மெடிக்கல் ஷாப் திறந்து ஒரே நாட்கள் ஆகுவதால் தற்போது யாரும் பணிக்கு வருவதில்லை அதனால் நானே மாத்திரைக்ககளை வருவது ஆகும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து கேள்வி கேட்டபோது அப்படித்தானே கொடுக்கிறேன் சிரிச்சுக்கிட்டே பதில் அளித்தார்.
அதற்கு மாத்திரை வாங்கியவர் ஏதாவது எனக்கு ஆனால் என்ன செய்வது என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்தவீடியோவும் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam