Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகை தரும் முதலமைச்சரை திமுக தொண்டர்கள் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்து வரவேற்க வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய், புதன் (பிப். 24, 25) ஆகிய 2 நாள்கள் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
இதற்காக, தூத்துக்குடி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வருகை தரும் அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்படவுள்ளது.
இதில், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ