Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச)
தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இன்று திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தை நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த தேர்தலில் மூன்று இடங்களில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.
இதன் காரணமாக இம்முறை திமுக தரப்பில் அக்கட்சிக்கு இரு தொகுதிகள் வழங்க திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி 5 தொகுதிகள் வரை கேட்டுள்ளது.
கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ