Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 23 பிப்ரவரி (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான துர்கா மூர்த்தி வெளியிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் இன்று (23.2.2026) வெளியிடப்பட்டது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1310951 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்களும் 635299, பெண் வாக்காளர்களும் 675452,
இதர வாக்காளர்களாக 200 ஆக உள்ளனர்.
ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில்2,20,554 வாக்காளர்களும்,
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில்2,27,327 வாக்காளர்களும்,
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 2,35,351, வாக்காளர்களும்,
பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 2,03,567 வாக்காளர்களும்,
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில்2,06,928 வாக்காளர்களும்,
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 2,17,224 வாக்காளர்களும் என மொத்தம் 13,10,951 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam