நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல், 23 பிப்ரவரி (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள 400 ஆண்டு பழமையான நாத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி இன்று காலை மாரியம்மன் கொடி மேளதாளம் முழங்க கோயில் முன் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த விழா 15 நாட்கள் நடை
Nathham


திண்டுக்கல், 23 பிப்ரவரி (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள 400 ஆண்டு பழமையான நாத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி இன்று காலை மாரியம்மன் கொடி மேளதாளம் முழங்க கோயில் முன் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். நாளை அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் தலையில் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு செல்வர்.

பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள்.

தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகுமரம் ஏறுதல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி திருவிழா போன்ற நேர்த்தி கடன்கள் வருகிற மார்ச் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ