Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 264 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலமாக எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்தும் பணி என்பது நடைபெற்றது இதைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி பாளையங்கோட்டை நாங்குநேரி அம்பாசமுத்திரம் மற்றும் ராதாபுரம் ஆகிய தொகுதிகளை உள்ளடங்கியது.
5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்து 53 ஆயிரத்து 264 வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண் வாக்காளர்கள் ஆறு லட்சத்தி 11 ஆயிரத்து 601 பேரும் பெண் வாக்காளர்கள் ஆறு லட்சத்து 41 ஆயிரத்து 518 பேரும் மூன்றாம் பாலினத்தினர் 145 பேரும் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனை ஐந்து சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகளும் உதவி தேர்தல் அதிகாரிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் பெற்றுக் கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN