Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
வாட்ஸ்அப் செயலியில், செய்திகளை முன்கூட்டியே சேமித்து வைத்து, திட்டமிட்ட நேரத்தில் தானாகவே அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் பரிமாற்ற செயலிகளில் முதன்மையானதாக விளங்கும் வாட்ஸ்அப், பயனர்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வாட்ஸ்அப்-இல் செட்யூல்ட் சாட் எனும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, முன்பு சேமித்து வைக்கப்பட்ட செய்தியை குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் மூலமாக, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சரியாக 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துகளை முன்கூட்டியே திட்டமிட்டு தானாகவே அனுப்ப முடியும்.
ஆரம்பகட்டமாக இந்த அம்சத்தை குழு சாட்களில் அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. மேலும், இதன் பயன்பாட்டின் அடிப்படையில் தனிநபர் சாட்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தற்போது, வணிக பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப்-களில் கட்டணம் செலுத்தி செட்யூல்ட் சாட் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வசதியை அனைத்து பயனாளர்களுக்கும் இலவசமாக வழங்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM