Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
புதுடெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இன்று சமூக ஊடகங்களில் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்,
வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு இந்தியாவின் திறன்களுக்கான உலகளாவிய பாராட்டைப் பரவலாகக் பெற்றிருக்கிறது.
தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்களின் எதிர்கால மனநிலை மனிதகுலத்திற்கு எவ்வாறு பெரிதும் பயனளிக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டு முயற்சியில் ஒரு முக்கியமான அடையாளமாக, செயற்கை அறிவுத் தாக்கம் பற்றிய புதுடெல்லி பிரகடனத்தை ஏற்றதன் மூலம் 2026 செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு நிறைவடைந்தது.
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM