முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி, 23 பிப்ரவரி (ஹி.ச.) மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழ்ந்தவரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதன்மை ஆலோசகராக செயல்பட்டவருமான முகுல் ராய் (வயது 71). இவர், முன்னதாக மத்திய ரயில்வே அமைச்சராகவும், இ
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானதை தொடர்ந்து பிரதமர் மோடி இரங்கல்


புதுடெல்லி, 23 பிப்ரவரி (ஹி.ச.)

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழ்ந்தவரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதன்மை ஆலோசகராக செயல்பட்டவருமான முகுல் ராய் (வயது 71).

இவர், முன்னதாக மத்திய ரயில்வே அமைச்சராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர், ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இதனை அவருடைய மகன் சுப்ரான்ஷு ராய் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தன்னுடைய இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராயின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்ததாகவும், அவருடைய அரசியல் அனுபவம் மற்றும் சமூக சேவை முயற்சிகளுக்காக அவர் நினைவு கூறப்படுவார் என்றும், அவருடைய குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM