பாம்பன் மீனவர்கள் 12 பேரையும் ஒரு விசைப்படகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம், 23 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் அத்துமீறிக் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பாம்பன் மீன் பிடித்த
மீனவர்கள்


ராமேஸ்வரம், 23 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் அத்துமீறிக் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

பாம்பன் மீன்

பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகையும் அதிலிருந்து 12 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam