ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேர் விடுதலை - படகோட்டிக்கு ஆறு மாத சிறை தண்டனை
ராமநாதபுரம், 23 பிப்ரவரி (ஹி.ச.) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுத
Fishermen


ராமநாதபுரம், 23 பிப்ரவரி (ஹி.ச.)

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதிலிருந்து மூன்று மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இந்த நிலையில் சிறை காவல் முடிந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் இரண்டு மீனவர்களை விடுதலை செய்தும் படகோட்டிக்கு ஆறு மாதம் சிறைதண்டனையும் இலங்கை ரூபாய் மதிப்பீல் 4 மில்லியன் ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபதார தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்

Hindusthan Samachar / ANANDHAN