Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 23 பிப்ரவரி (ஹி.ச.)
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்றைய தினம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டார்.
ஆண் வாக்காளர்கள்: 13,84,548
பெண் வாக்காளர்கள்: 13,70,962
மூன்றாம் பாலினத்தவர்கள்: 320 என மொத்தம்: 27,55,830 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த பணிகளில் சேலம் மாவட்டம் முழுவதும் 1,18,166 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
304 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
18 வயதிற்கு உட்பட்ட வாக்காளர்கள் 62,021 வாக்காளர் பட்டியல் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்
ஆண்கள்: 13,30,117
பெண்கள்: 13,37,688
மூன்றாம் பாலினத்தவர்: 303
மொத்த வாக்காளர்கள்: 26,68,108
இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் என சுமார் 3,62,429 பெயர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam