Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச)
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.00 மணி அல்லது 6.30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழக அமைச்சரவை கூட்டம் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக சில முக்கியத் திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
மேலும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு எழும் சவால்களைக் கையாள்வது குறித்தும் அமைச்சர்களுக்கு முதல்வர் முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b