Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் 114-வது அவதார திருவிழாவினை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, ஐயா வைகுண்டசாமியின் 194-வது அவதார திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னதாக விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறை தினத்தில் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகள் ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும், இந்த தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையானது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 7-ஆம் தேதி அன்று தென்காசி மாவட்டத்தில் வேலை நாட்களாக அறிவிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN