திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பெண் பக்தரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
தெலுங்கானா, 23 பிப்ரவரி (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளியை சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்தார். ரூ 300 தரிசனடிக்கெட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார். தரிசனத்திற
பாம்பு


தெலுங்கானா, 23 பிப்ரவரி (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளியை சேர்ந்தவர் மவுனிகா (வயது 27).

இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்தார்.

ரூ 300 தரிசனடிக்கெட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார்.

தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் மோனிகா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.

அப்போது திடீரென வந்த பாம்பு ஒன்று மவுனிகாவின் காலில் கடித்துவிட்டு சென்றது.

பாம்பு கடித்ததால் மவுனிகா அலறி துடித்தார்.

இதனைக் கண்டு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தேவஸ்தான அதிகாரிகள் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து மவுனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அஸ்வினி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது மவுனிகாவின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam