Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 23 பிப்ரவரி (ஹி.ச.)
பல்லியா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால்.
ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு இளம் பெண்ணுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
ஜெய்ஸ்வால் வனத்துறை அதிகாரி என்பதால், காடு முழுவதையும் சுற்றி காண்பிப்பதாகவும், இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்கலாம் என்றும் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், ஜெய்ஸ்வால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக அந்தப் பெண்ணுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பெண் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, ஜெய்ஸ்வால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும், இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் விளைவாக, வனத்துறை அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM