Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)
கிருஷ்ணகிரி அருகே கோவில் திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் மகன் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கஞ்சா போதையில் பட்டாகத்தி போன்ற ஆயுதத்துடன் வந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எத்தலத்தில் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கல்வியில் சிறந்த தமிழ்நாடா அல்லது போதையில் சிறந்த தமிழ்நாடா என்று கேட்கும் அளவிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் தமிழக இளைஞர்கள் இப்படி சீரழிவது வேதனைக்குரியதாக உள்ளது.
நேற்று பாஜக இளைஞரணி சார்பில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாமல் சீரழித்துக் கொண்டிருக்கிற மக்கள் விரோத விடியா திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சூழலில் இப்படி ஓர் அதிர்ச்சி வீடியோ பதைபதைக்க வைக்கிறது.
திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் தான் பெண்களை மதிக்காமல், ரவுடியிசம், ஊழல் என்று இருக்கிறார்கள் என்றால் அவர்களின் வாரிசுகளும் இதுபோன்ற சமூக விரோதிகளாக மாறுவதுதான் விடியா திராவிட மாடல் 2.0 என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ