சட்டம் ஒழுங்கினை காற்றில் பறக்கவிட்டு ஊர்கள் தோறும் திமுக-வின் மாநாடுகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையை திமுக பயன்படுத்தி வருகிறது - வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) திருப்பூரில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்ட 6 நபர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்த
Vanathi


Bs


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

திருப்பூரில் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்ட 6 நபர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

வருகிற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் முக்கிய சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழக காவல் துறையின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத கோவை குண்டு வெடிப்பின் சுவடுகளே தமிழக மக்கள் மனதில் இன்னும் ஆறாத ரணமாய் இருக்கும் சூழலில் இதுபோன்ற செய்திகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்குலைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

விடியா திமுக ஆட்சியில் வன்முறை, போதை, ரவுடியிசம் என தறிகெட்டுக் கிடக்கும் தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டமும் மொத்த பாதுகாப்பினையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அராஜகங்களையும், அட்டூழியங்களையும் வளரவிட்டதுதான் விடியா திமுக ஆட்சியின் சாதனை.

சட்டம் ஒழுங்கினை காற்றில் பறக்கவிட்டு ஊர்கள் தோறும் திமுக-வின் மாநாடுகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையை ஏவல் துறையாகப் பயன்படுத்தும் மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு கடும் கண்டனங்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ