Enter your Email Address to subscribe to our newsletters


வேலூர், 23 பிப்ரவரி (ஹி.ச)
வேலூர் மாவட்டம் அகரம் சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
5000 நபர்கள் அமரக்கூடிய வகையில் ராட்சத மேற்குறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 4900 நபர்களும் அமர்வதற்காக இருக்கையில் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
அதேபோன்று கூட்டத்திற்கு வரக்கூடிய நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தாயிரம் நபர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டுள்ளது
10 மருத்துவ முகாம்கள், 10 ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்
1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நிகழ்ச்சி இடத்தை சுற்றி மொபைல் டாய்லட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் 4 மணிக்குள் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 8 மணியளவில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு இருக்கக்கூடிய விஜய் மதியம் 12:00 மணியளவில் நிகழ்ச்சி திடலுக்கு வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 9 மணி முதல் ஆக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் க்யூ ஆர் கோட் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்கள் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று பின் வரிசையில் அமர்ந்திருப்போர் நிகழ்ச்சி பார்க்கக் கூடிய வகையில் LED திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4900 நிர்வாகிகளும் அமர வைக்கப்பட்ட பின்னர் பிரச்சார உரையாற்ற உள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ