'விடியா ஆட்சி ; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' - அதிமுகவின் அதிரடி பிரச்சாரம்
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச) தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கையடக்க ஒரு பிரிண்டருடன் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை மக்களிடமே எடுத்துச் சொல்லும் ஒரு பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என
'விடியா ஆட்சி ; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' - அதிமுகவின் அதிரடி பிரச்சாரம்


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச)

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கையடக்க ஒரு பிரிண்டருடன் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.

திமுக ஆட்சியில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை மக்களிடமே எடுத்துச் சொல்லும் ஒரு பிரச்சாரத்தை செய்ய வேண்டும் என திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அமைப்பு ரீதியாக அதிமுகவில் செயல்படும் 82 மாவட்ட அமைப்பும், கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பிரிவும் இணைந்து புது வியூகத்தை முன்னெடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

அதன்படி, 'விடியா ஆட்சி ; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' எனும் பெயரில் அதிமுகவுடன் கணெக்ட் செய்யப்பட்ட ஒரு செயலியை உருவாக்கி அதனை கையடக்க பிரிண்டருடன் இணைத்துள்ளனர்.

அதிமுகவினர் அந்த பிரிண்டருடன் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் அவர்கள், திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளை இல்லத்தரசி களிடம் எடுத்து சொல்லும் முகமாக, தங்கள் கையிலுள்ள பிரிண்டரின் பட்டனை தட்டுகிறார்கள். ஷாப்பிங் மால்களில் கொடுக்கப்படும் பில்கள் போல ஒரு பில் வருகிறது.

அதில், அதிமுக ஆட்சியில் அரிசியின் விலை என்னவாக இருந்தது? தற்போது திமுக ஆட்சி யில் அது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதில் ஆரம்பித்து பல்வேறு பொருட்களின் விலையை விலாவரியாக அச்சிட்டப்பட்டுள்ளது. அந்த பில்களை மக்களுக்கு வழங்குகின்றனர்.

மேலும், அரிசி, பால், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களின் விலை உயர்வை குறிப்பிடும் இந்த பில், கடந்த 5 ஆண்டுகளில் மாதாந்திர செலவுகள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதையும் ஆதாரத்துடன் விளக்குகிறது அந்த பில்!

இந்த பிரச்சாரத்தின் மூலம், இதுவரை 1 கோடி வீடுகளுக்கு இந்த பில்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதிமுகவின் இந்த கையடக்க பிரிண்டரின் விலை 3,000 ரூபாய். மொத்த மதிப்பு 6 கோடி ரூபாய். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 வீடு களுக்குச் செல்ல வேண்டும்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 4 லட்சம் வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளை சந்தித்து இந்த பில்களை கொடுத்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b