தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்
தூத்துக்குடி, 23 பிப்ரவரி (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட
தூத்துக்குடியில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்


தூத்துக்குடி, 23 பிப்ரவரி (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் இளம்பகவத் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் மொத்தம் 13,76,624 வாக்காளர் இடம் பெற்றுள்ளனர்.

விளாத்திகுளம் தொகுதியில் 2,03,732 வாக்காளர்களும், தூத்துக்குடி தொகுதியில் 2,48,300 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் 2,30,702 நபர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 2,12,885 நபர்களும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 2,40,988 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 2,40,017 வாக்காளர்களும் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், அவற்றை வரும்

25-02-2026-க்குள் தெரிவிக்குமாறு பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b