Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 23 பிப்ரவரி (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று
(23.2.2026 )முதல் 28.2.2026 வரை குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு இந்த நுண்சத்து இன்றியமையாதது.
கண் ஆரோக்கியம்: கண் குருடு ஏற்படாமல் தடுக்க இது அவசியம். குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த திரவத்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.
அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மில்லி, 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மில்லி அளவில் இந்த திரவம் வழங்கப்படும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b