இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேச்சு வார்த்தை குழு நியமனம்..!
தமிழ்நாடு, 24 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை குழு நியமனம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது; இந்தியக் கம்யூனிஸ
சிபிஐ


தமிழ்நாடு, 24 பிப்ரவரி (ஹி.ச.)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை குழு நியமனம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது;

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தைக்குழு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தோழர் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

நான்கு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக் குழு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், திமுகழக தலைமையோடு தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த தோழர்கள் மு.வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்), கே.சுப்பராயன் எம்.பி., இரா.முத்தரசன், கோ.பழனிசாமி ஆகிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு வரும் 27.02.2026 ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam