Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச)
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த காவலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழே லுலு மால் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்குள்ள தனியார் காபி ஷாப்பில் வேலை செய்து வரும் தனது தந்தைக்கு 15 வயது சிறுவன் உணவு அளிக்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த காவலாளியான தாம்பரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பால் அலெக்சாண்டர் (48) என்பவர் அந்த சிறுவனிடம் வந்து பேச்சு கொடுத்து தனியாக அழைத்து சென்றதாக தெரிகிறது. மேலும் அந்த சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பிறகு சிறுனை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தனது தந்தையிடம் அந்த சிறுவன் கூறியதும் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பிறகு பால் அலெக்சாண்டரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ