Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
மாநில தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் தேசிய வட்டமேசை மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டமேசை மாநாடு நடைபெகிறது. கடைசியாக இம்மாநாடு 1999-ம் ஆண்டு நடைபெற்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் இந்த வட்டமேசை மாநாடு நடைபெற்று வருகிறது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில தேர்தல் ஆணையர்கள் தங்கள் சட்ட, தொழில்நுட்ப நிபுணர்களுடன் தமிழ்நாடு உள்பட 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கலந்து கொண்டனர்.
தேர்தல் செயல்முறைகள் தொடர்பாக ஒருங்கிணைப்பை அதிகரிப்பதோடு, இதில் நடைபெறும் விவாதங்கள் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை வழங்கும் என்றும், தேர்தல் நிர்வாகத்தில் கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாள் முழுவதும் தொழில்நுட்பம், வாக்காளர் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும் என்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட ECI நெட் டிஜிட்டல் தளம் குறித்து ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கங்களை வழங்குவார்கள்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வலிமை, வெளிப்படைத்தன்மை, பாதுகாப்புகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam