டெல்லியில் நடுவானில் விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசர தரையிறக்கம்
புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.) டெல்லியில் இருந்து லடாக்கில் உள்ள லே நகரத்திற்கு 150 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலை புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு இருப
விமானம்


புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.)

டெல்லியில் இருந்து லடாக்கில் உள்ள லே நகரத்திற்கு 150 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலை புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.

நடுவானில் என்ஜின் கோளாறு கண்டறியப்பட்டதால் பயணிகள் அதிர்ந்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்ட பைலட் விமானத்தை அவசர காலம் கருதி மீண்டும் தரையிறங்க அனுமதி கேட்டார்.

விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்ததும் விமானம் மீண்டும் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது. இன்று அதிகாலை 6.45 மணியளவில் விமானம் டெல்லியில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளறை கண்டறிந்து சீர் செய்யும் பணியில் விமான நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- டெல்லியில் இருந்து லே நகருக்கு சென்ற விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.

காக்பிட் அறையில் தீ எச்சரிக்கை அலர்ட் எதுவும் இல்லை என்று கூறினார். டெல்லியில் 150 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட இடத்திற்கே முழு எமெரெஜென்சி அலர்ட்டுடன் மீண்டும் தரையிறங்கிய சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam