உத்தரபிரதேசத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு
லக்னோ, 24 பிப்ரவரி (ஹி.ச.) மீரட், லிசாடி கேட் பகுதியைச் சேர்ந்த இக்பால் அகமது என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு, இக்பால் அகமதுவின் இல்லத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டது. அவர்கள் தீயில் இருந்து
உத்தரபிரதேசத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு


லக்னோ, 24 பிப்ரவரி (ஹி.ச.)

மீரட், லிசாடி கேட் பகுதியைச் சேர்ந்த இக்பால் அகமது என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு, இக்பால் அகமதுவின் இல்லத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டது. அவர்கள் தீயில் இருந்து வெளியேற முயற்சித்தும் முடியவில்லை.

இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட ஆறு பேர் உடனடியாக அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM