Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச)
சென்னை வில்லிவாக்கம் பொன்னார் கிணறு முதல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(46). லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவருக்கு இன்பமலர்(48) என்ற மனைவியும், தீபிகா(19) என்ற மகளும் உள்ளனர். மேலும் இவரது மனைவி இன்பமலர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு இன்பமலர் தன் மகள் தீபிகாவுடன் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.அப்போது சமையல் சிலிண்டர் காலியானதால் வீட்டில் இருந்த மற்றோரு சிலிண்டரை கொண்டு வந்து மாற்றியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து வீட்டில் பரவியது.
உடனே கணவர் ஏழுமலை ஓடிவந்து தன் மகளிடம் அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் அனைக்குமாறு கூறியுள்ளார்.
உடனே மகள் தீபிகா ஓடி சென்று லைட்டை அனைத்து போது தீப்பொறி பட்டு கேஸ் தீப்பற்றி எரிந்தது. அப்போது ஏழுமலை அவரது மனைவி இன்பமலர் இருவரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர். உடனே மகள் தீபிகா அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஏழுமலை 65 சதவீதம் தீக்காயங்களுடனும் இன்பமலர் 48 சதவீதம் தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்ல வேலையாக தீபிகா காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த வில்லிவாக்கம் போலீஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Hindusthan Samachar / P YUVARAJ