ஜெயலலிதாவின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறி
Anb


Gw


சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை அவரது பிறந்தநாளில் போற்றுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் புகழாரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் 78-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சராக தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய பணிகளை நான் நினைவு கூர்கிறேன்.

துணிச்சலின் உருவமாகத் திகழ்ந்த அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டிருந்தார்.

சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 69% இட ஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது அதை சட்டரீதியாக முறியடித்து சமூகநீதியின் மீது தாம் கொண்டிருந்த அக்கறையை நிரூபித்தார்.

முன்னாள் முதலமைச்சரின் துணிச்சலையும், சமூகநீதி சிந்தனையையும் அவரது பிறந்தநாளில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ