காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மக 4ஆம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
காஞ்சிபுரம், 24 பிப்ரவரி (ஹி.ச.) உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக காலை மாலை வேளைகளில் காஞ்சி காமாட்சி அம்மன் லக்ஷ்மி தேவி சரஸ்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மக 4ஆம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


காஞ்சிபுரம், 24 பிப்ரவரி (ஹி.ச.)

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மக பிரம்மோற்சவம் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த மூன்று நாள்களாக காலை மாலை வேளைகளில் காஞ்சி காமாட்சி அம்மன் லக்ஷ்மி தேவி சரஸ்வதியுடன் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 24) நான்காம் நாள் காலை உற்சவத்தில் தங்கச் சூரிய பிரபை வாகனத்தில் மெரூன் பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கர மடம் அருகே காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமாட்சி அம்பாளுக்குப் பழங்கள் வைத்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

மேலும் தங்க ஜடை, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை மனம் உருகி வேண்டிச் சிறப்புத் தீப ஆராதனையைத் தரிசித்தார்.

இதனைத் தொடர்ந்து குங்கும பிரசாதம், அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b