Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90).
இவர்களுக்கு பழனி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பழனி இறந்து விட்டார். மேலும் அருணாச்சலமும் இறந்து விட்டார். இதன் காரணமாக வெள்ளையம்மாள் தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளையம்மாள் முகத்தில் வெட்டு காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தகவல் அறிந்து நெல்லை ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ராஜா சம்பவ இடத்துக்கு சென்று மேற்கொண்டார்.
முதல் கட்ட விசாரணையில் வெள்ளையம்மாளை அவரது மருமகள் கோகிலா கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN