புலி தாக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு
நீலகிரி, 24 பிப்ரவரி (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நத்தனார் மந்து பகுதியில் வசித்து வந்த சின்ன காடி மந்தை கிராமத்தை சேர்ந்த புஸ்தேல்குட்டன் (56) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்த
Death


நீலகிரி, 24 பிப்ரவரி (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நத்தனார் மந்து பகுதியில் வசித்து வந்த சின்ன காடி மந்தை கிராமத்தை சேர்ந்த புஸ்தேல்குட்டன் (56) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று மாலை தனது விவசாய தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

இதனால் அவர் வேறு கிராமத்திற்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் முதலில் நினைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து பல்வேறு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சின்ன காடி மந்து அருகிலுள்ள வனப்பகுதியில் புலி தாக்கிய நிலையில் புஸ்தேல்குட்டன் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலி தாக்குதலில் பழங்குடியினத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்குகள் கிராமப்புற பகுதிகளுக்கு அடிக்கடி வருவது குறித்து மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN