Enter your Email Address to subscribe to our newsletters

இராமநாதபுரம், 24 பிப்ரவரி (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி அடுத்த சத்திரக்குடியில் வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை இப்பள்ளிக்கு சொந்தமான
பேருந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை
ஏற்றுக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய
நெடுஞ்சாலையில் இருந்து பள்ளிக்குள் செல்வதற்காக சாலையின் இடது புறமாக
திரும்பி உள்ளது.
அப்போது பேருந்தின் பின்புறமாக பாறாங்கற்கள் ஏற்றி வந்த
டிப்பர் லாரி பேருந்து மீது மோதியதில் அந்த பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள்,, ஓட்டுநர், ஆசிரியர்கள் என
30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விருதுநகரில் இருந்து பாறாங்கல்
ஏற்றிக்கொண்டு தங்கச்சிமடம் சென்று லாரியில் அளவுக்கு அதிகமாக பாறாங்கல்களை
ஏற்றியதால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில்
அஜாக்கிரதையாக லாரியை ஒட்டி சென்றதாக லாரி உரிமையாளருக்கு ஒரு லட்சத்து 40
ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராசு
உத்தரவிட்டார்.
மேலும் லாரியின் உரிமத்தை ரத்து செய்ய விருதுநகர் மாவட்ட
மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam