Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை தியாகராய நகரில் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாமை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் , பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோருடன் இணைந்து பார்வையிட்டார்.
மத்திய அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இணைவது , இலவச எரிவாயு இணைப்பு பெறுவது , சுகாதார திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது , முத்ரா உள்ளிட்ட தொழில்சார் கடனுதவி திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் பங்கேற்று பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேடைப்பேச்சு,
பிரதமர் மோடியின் இலக்கு 2047 ல் நமது நாடு முழு வல்லராசாக வேண்டும் என்பதே .அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வையோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக நாட்டின் வளர்ச்சி இருக்க வேண்டும். சென்னை மெட்ரோ உட்பட பல உள்கட்டமைப்புகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
சென்னையில் இருந்து ஐதராபாத் , பெங்களூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது. அதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது.
சென்னை மதுரை கோவை தூத்துக்குடி திருச்சி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
2014 க்கு முன் பல பெண்கள் வங்கி வாசலுக்கே சென்றது கிடையாது , ஆனால் இன்று ஜன் தன் யோஜனா மூலம் பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜன்தன் யோஜனா திட்டத்தில் 1.8 கோடி கணக்குகள் தமிழ்நாட்டில் உள்ளது.
முத்ரா யோஜனா திட்டத்தில் 3.6 லட்சம் கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான கிசான் அட்டை 34 லட்சம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
வீடுதோறும் குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1.1 கோடி குழாய் இணைப்பு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
40 லட்சம் இலவச எரிவாயு இணைப்பு தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மாதம்தோறும் 5 கிலோ அரிசி , 1 கிலோ பருப்பு என மாதம்தோறும் தமிழ்நாட்டில் 3.6 கோடி பேர் பிரதமர் உணவு திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர்.
திருக்குறளை 35 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளது மத்திய அரசு என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது,
தமிழகம் இரட்டை பொருளாதார வளர்ச்சியை எட்டியதில் மத்திய அரசின் பங்கும் உள்ளது , முதலமைச்சர் கூறுவது போல் தமிழ்நாடு அரசு மட்டுமே அதற்கு காரணமல்ல.
மத்திய அரசின் முத்ரா , ஆயுஷ்மான் பாரத் , புத்தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள உள்ளிட்ட திட்டங்களால்தான் தமிழகத்தின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது .
நான் உங்கள் வீட்டில் ஒருவன் என்று கூறும் விஜய் , டிக்கெட் இல்லாமல் அனைவரையும் தனது சினிமாவை பார்க்க வைத்தாரா...?
திமுக அமைச்சர்களின் சொத்து நிலவரம் குறித்து விஜய் எழுப்பிய கேள்விகள் உண்மையிலேயே பொதுமக்களை சென்று சேர்ந்துள்ளது.
ஆனாலும் விஜயின் திமுக மீதான விமர்சனம் கருத்தியல் ரீதியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கே துணை செய்யும்.
கட்சி ரீதியாக 4 முனைப் போட்டி இருந்தாலும் கருத்தியல் ரீதியாக தமிழகத்தில் இருமுனைப்போட்டிதான் நிலவுகிறது.
தமிழகத்தில் விஜய் கூறுவதுபோல திமுக , தவெக இடையே போட்டியில்லை , தேசிய ஜனநாயக கூட்டணி - திமுக இடையேதான் போட்டி.
கூட்டணி பேச்சுவார்த்தை க்கு வந்த காங். பொதுச்செயலாளர் வேணுகோபால் wait and see என்றுதான் கூறி சென்றுள்ளார்.
எங்கள் கூட்டணியில் அப்படியான wait and see கட்சிகள் எதுவும் இல்லை.
எங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே பேச்சுவார்த்தையை உரிய நேரத்தில் தொடங்குவோம்.
காங். கட்சி நவ. மாதமே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழுவை அமைத்து இப்போது வரை பேச்சு வார்த்தைக்காக காத்திருக்கின்றனர்.என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ