Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஆசிஸ் ராவத் மீது விசாரணை
நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய கூறிய வழக்கிற்கு உத்தரவிற்கு தடை விதிக்க கோரி தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்திருந்தார்.
அந்த வழக்கில் தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத் கடந்த 2023 முதல் 25 ஆண்டு வரை தஞ்சையில் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்ததார்.
அப்பொழுது காவலர் குடியிருப்பில் உள்ள தேக்கு மரங்களை வெட்டி சொந்த
பயன்பாட்டிற்கு பயன்படுத்தியுள்ளார் மேலும் காவலர்கள் நலன் சங்கம் பொது நிதி
எடுத்து கையாடல் செய்துள்ளார் காவலர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட முறையான டெண்டர் விடவில்லை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மனு அளித்தேன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே இவர் மீது லஞ்ச
ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.
காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
தரப்பில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது .
இந்த வழக்கு இன்று நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டதாவது:
இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி, நீதி பரிபாலனையின் அடிப்படை நடைமுறைகளை
பின்பற்றாமல், அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, சட்டத்தில்
நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமோ அல்லது
குற்றச்சாட்டுக்குள்ளான ஐபிஎஸ் அதிகாரியிடமோ எவ்வித விளக்கமும் கேட்காமல்,
நேரடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது சட்டத்திற்கு முரணானதாகும்.
அரசு ஊழியர்கள் தங்களது அலுவல் கடமைகளை மேற்கொள்ளும் போது, அவர்கள்மீது
குற்றச்சாட்டுகள் எழுந்தால், அவர்களை தேவையற்ற வழக்குகளில் இழுத்தடிக்கக்
கூடாது என்பதற்காகவே, முன்அனுமதி பெற்று மட்டுமே வழக்கு பதிவு செய்ய வேண்டும்
என சட்டம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில், எந்தவித முன்அனுமதியும்
பெறாமல் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டப்படி தவறானதாகும்.
மேலும், புகார் தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது முறையற்றது. இத்தகைய வழக்குகளில் மாவட்ட
நீதிமன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம் ஏற்கனவே
பல தீர்ப்புகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. குறிப்பாக, விசாரணை
நீதிமன்றத்திற்கு இவ்வாறு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த புகாரை அளித்த வழக்கறிஞர்மீதே ஏற்கனவே 12 குற்றவழக்குகள்
நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை கருத்தில் கொள்ளாமல் முறையான ஆய்வின்றி
மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனவே, ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதேபோல, ஐபிஎஸ் அதிகாரியின்
குடியிருப்பு வீட்டை ஆய்வு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இவ்வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு
இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam