Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
தேனி அருகே உள்ள தென்கரை பகுதிக்கு உட்பட்ட T.கள்ளிப்பட்டி கிராமத்தைச்
சேர்ந்தவர் அய்யனார் (25) இவர் தனது வீட்டில் தனது சித்தப்பா மகன்
ராஜபாண்டியுடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது இன்று அதிகாலை அய்யனாரின் வீட்டின் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக்
கொண்டிருந்த இருவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து வீட்டை வெளியே பூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
தீ பற்றி எரிந்த இருவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வீட்டுக்குள் வந்து பற்றி எரிந்த தீயணை அணைத்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்கரை காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் பெட்ரோல் உடன் வீட்டிற்கு வந்து தீ வைத்த நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது ?முன் விரோதத்தால் சம்பவம் நடைபெற்றது அல்லது வேறு காரணங்களால் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தற்போது தென்கரைப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam