மார்ச் 1 ஆம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
மதுரை, 24 பிப்ரவரி (ஹி.ச.) மார்ச் 1 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை ம
PM Modi


மதுரை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

மார்ச் 1 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை மண்டேலாநகர் பகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார்.

இந்த பொதுக்கூட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்பாக, மாலை நேரத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

தரிசனத்திற்குப் பின்னர் நேரடியாக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கோவில் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளது.

பிரதமர் வருகையையொட்டி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN