Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 24 பிப்ரவரி (ஹி.ச.)
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவையல் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணி பழுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்க வேண்டும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% குறைக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்ய வேண்டும்.
பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அனைத்து காலி பணியிடங்களையும் காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பெடரேஷன் ஆப் ரெவென்யூ அசோசியேசன் சார்பில் கால வரையரற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வருவாய்த்துறை அலுவலகத்திற்கு தினம் தோறும் வரும் பொது மக்களின் பட்டா மாற்றுதல் நில அளவை சான்றிதழ்கள் போன்றவற்றை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam