ஓரிரு நாட்களில் திமுகவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வரும் ,அதனால் கட்சியினர் யாரும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம் - திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.) தேர்தல் முடியும் வரை கட்சியினர் யாரும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடிய
Be


சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

தேர்தல் முடியும் வரை கட்சியினர் யாரும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தேர்தலுக்கு மிகக் குறுகிய கால இடைவெளி தான் உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இன்னும் ஓரித நாட்களில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழைப்பு வரும். திமுக கூட்டணியில் விசிக்காவிற்கு எந்தெந்த தொகுதிகள் எத்தனை தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் தேர்தல் பிரச்சார களத்தில் பணிகள் உள்ளது.

கட்சியினர் தினந்தோறும் நிறைய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு கொடுக்கின்றனர் இதனால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை.

ஒரு மணி நேரம் கூட தூங்க முடியவில்லை ஓய்வெடுக்க முடியவில்லை என்று நினைக்கவில்லை ஆனால் செய்ய வேண்டிய கட்சிப் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு அழுத்தம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கூட கல்யாணத்திற்கு வர வேண்டும் காதுகுத்திற்கு வர வேண்டும் இல்ல திறப்பிற்கு வரவேண்டும் என கட்சியினர் வந்து கொடுக்கும் அழைப்பு தாங்க முடியவில்லை. கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்ற கவலை உள்ளது.

தேர்தல் முடியும் வரை குடும்ப நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்க வேண்டாம். அதனை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கட்சி மறு சீரமைப்பிற்கு ஒரு வாரம் மட்டுமே நேரம் உள்ளது அதன் பிறகு தொகுதி பங்கீடு தொகுதிகளை அடையாளம் காண்பது வேட்பாளர் தேர்வு நிதி திரட்டுவது பிரச்சாரம் செய்வது என கடகடவென தேர்தல் வந்துவிடும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ